மீன்வளத் துறை மானியக் கோரிக்கைகள் 2018 - 2019

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் 2018-2019 ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கைகளின் முக்கிய அம்சங்கள்.




  • சென்னை மீன்படி துறைமுகத்தில் படகுகள் நிறுத்து மிடத்திலுள்ள இட நெரிசலை குறைக்கும் விதமாக 5 கோடி ரூபாய் செலவில் படகு அணையும் தளம் நீட்டித்து அமைக்கப்படும்.

  • பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி திறன் மற்றும் மீன் உற்பத்தியினை அதிகரித்திட ஏதுவாக 50 விழுக்காடு மானியத்தில் வெளிப் பொருத்தும் / உட் பொருத்தும் இயந்திரங்கள் 2 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

  • தமிழ்நாட்டின்உவவர்நீர் வாழ் உயிரின வளர்ப்பிற்கு உகந்த உவர்நீர் வள வரைபடம் (Resource Mapping) தயார் செய்யும் பணி 50 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

  • கடலில் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பிற்கு தேவையான மீன்குஞ்சு உற்பத்தி மேற்கொள்ள 1கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கடல் மீன்குஞ்சு வளர்ப்பகம் அமைக்கப்படும்.

  • இராமநாதபுரம் மாவட்ட மீனவ மகளிரின் வாழ்வாதாரத்திற்கு 3 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் கடற்பாசி வளர்ப்பு மற்றும் உபபொருட்கள் தயாரிப்பு அலகு அமைக்கப் படும்.

  • காஞ்சிபுரம் மாவட்டம் ஆத்தூரில் அமைந்துள்ள மீன்குஞ்சு வளர்ப்பு நிலையம் 1கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும்.

  • ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அரசுபழையமீன்பண்ணை யில் உள்ள சினைமீன் குளங்கள் 1 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.

  • நீலகிரி மாவட்டத்தின் உயர் மட்ட நீரோடைகளில் குளிர் நீர் பிரதேச மீன் இனமான 'ட்ரவுட்' மீன் இன இருப்பு அதிகரிக்கப்படும்.

  • தனியார் மீன் பண்ணையாளர் களை ஊக்குவித்திடும் பொருட்டு, மீன் குஞ்சு பொரிப்பகம் அமைத்திட 30 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

  • கடல் உணவு தயாரிப்பு தொடர்பான சிறப்பு பயிற்சி சென்னை இராயபுரத்தில் உள்ள மத்திய சமையலறைக் கூடத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படும்.

  • தமிழ் நாட்டில் இரண்டு இடங்களில் 20 இலட்சம் ரூபாய் செலவில் நவீன மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

  • தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் மீன் உணவகம், அலுவலகம் மற்றும் மீன்துறை ஆய்வு மாளிகை அமைக்கப்படும்.

  • தமிழ் நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் மீன் விற்பனை கட்டமைப்புகளை மேம்படுத் திட தொடர் குளிர் சாதன வசதிகள் 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

  • மீன்களை சுகாதாரமான முறையில் கையாளுவதற்கு பாரம்பரிய மீன்வர்களுக்கு 35 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் குளிர்காப்பு பெட்டிகள் வழங்கப்படும்.

  • தமிழ்நாட்டின் நான்கு மீன்பிடி துறைமுகங்களில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கூட்டுறவு அங்காடிகள் அமைக்கப்படும்.

  • தமிழ் நாட்டின் மூன்று மீன்பிடி துறைமுகங்களில் தொடர் குளிர்சாதன வசதிகள் ஏற்படுத்தும் விதமாக 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

  • மீனவர் நலவாரிய உறுப்பினர் களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

  • எண்ணூர் துறைமுக பகுதியில் உள்ள 8 மீனவ கிராமங்களுக்கு எண்ணூர் காமராஜர் துறைமுக பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் 1 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் வாழ் வாதார வசதிகள் ஏற்படுத்தப்படும்.

  • மாதவரம் வண்ண மீன் வானவில் தொழில்நுட்பப் பூங்காவில் செயல் விளக்க அலகுகள் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

  • மதிப்பு கூட்டிய மீன் பொருட் கள்தயாரித்தலை மேம்படுத்திட 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் “கயலகம்' மீன் அங்காடிகள் அமைக்கப்படும்.

  • வாணியஞ்சாவடியில் உள்ள முதுகலைப் பட்டமேற்படிப்பு நிலையத்தில் மாநில மீன் உணவுதரச்சான்றிதழ் ஆய்வகம் 2கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

  • நீர் மறு சுழற்சி முறையில் கொடுவாமீன்வளர்ப்பு தொழில் நுட்ப பூங்கா 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

  • மீன்வள பல்கலைக்கழகத்தில் செயல்படும் நிலைத்த மீன் உற்பத்தி மையங்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 3கோடியே 78 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

  • தூத்துக்குடி மாவட்டம் தருவைக் குளத்தில் ஒருங்கிணைந்த பல்அடுக்கு நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்பம் 2 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல் படுத்தப்படும்.

  • தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் மூலம் மேம்படுத் தப்பட்ட மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

  • பழவேற்காடு ஏரியில் மீன் வளத்தை அதிகரிக்க செயற்கைப் பவளப்பாறைகள் 8கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

  • மீன்வளர்ப்பு தொழிற்கூடங் களுக்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நவீன மீன்வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சிகள் 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடத்தப்படும்.

  • கடலில் மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்க்கும் திட்டம் 2 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் செயல் படுத்தப்படும்.